ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி நினைத்து மிகவும் டென்ஷனில் இருக்கின்றார் நாக சைதன்யா.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் அமீர்கானின் லால் சிங் சட்டா இந்தி திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கின்றார். மேலும் ராணுவ வீரராக நடித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை நினைத்து தற்பொழுது நாக சைத்தன்யா டென்ஷனாக இருக்கின்றார்.
படம் குறித்து அவர் கூறியுள்ளதாவது, படப்பிடிப்புக்கு ஆறு மாதத்திற்கு முன்பே என்னிடம் ஸ்கிரிப்ட்டை கொடுத்து விட்டார்கள். எனக்கு இந்தி அவ்வளவாக வராது. நான் சென்னையில் வளர்ந்தவன், ஹைதராபாத்தில் வசிப்பவன். எங்கள் வீட்டில் தமிழ், தெலுங்கு தான் பேசுவோம். எனக்கு இந்தி பேச பயிற்சி அளித்தார் இயக்குனர். இந்தி பேச தெரிந்த தெலுங்கு பையன் கதாபாத்திரம் என்னுடையது என்பதால் ஹிந்தி உச்சரிப்பு வேறு மாதிரி இருந்தாலும் படத்திற்கு பொருந்தியது. ஸ்ரீநகரில் இருக்கும் ராணுவ முகாமில் பயிற்சி பெற்றோம் எனக் கூறியுள்ளார்.