Categories
தேசிய செய்திகள்

தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய்…. சமூக வலைத்தளத்தில் 47 கோடி திரட்டிய சிறுமி பலி…. பெரும் சோகம்….!!!!!!!!

தம்பிக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலமாக 47 கோடி நிதி திரட்டிய சிறுமி அதே  நோய்க்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல்  பகுதியை சேர்ந்த ரபிக் மாரியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களின் மகள் அப்ரா (15). இவருக்கு சிறுவயதில் எஸ்எம்ஏ எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் சிகிச்சைக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்பதனால் அந்த சிறுமி சக்கர நாற்காலிலேயே தனது வாழ்க்கையை கழித்து வந்துள்ளார். மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில் அப்ராவின் தம்பி முகமதுவிற்கு தசை சிதைவு  நோய் ஏற்பட்டு இருக்கிறது.

இதனை குணப்படுத்த ஒரு டோஸ் மருந்திற்க்கு மட்டும் 18 கோடி வரை செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் சிறுமி தனது தம்பியை காப்பாற்ற கடந்த வருடம் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு குறுகிய காலத்திலேயே சுமார் 47.5 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தின் மூலமாக அப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே மருத்துவமனையில் அப்ராவும்  சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் நேற்று முன்தினம் காலையில் அப்ரா சிகிச்சை பலன் என்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தம்பிக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சைக்கு சமூக வலைத்தளம் மூலம் பணம் திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |