தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த்.
இவருக்கு விஜய பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் விஜய பிரபாகரன் பேட்மிட்டன் அணியை நிர்வகித்து வருகிறார். ஒரு பக்கம் இதையும் கவனித்துக் கொண்டு மறுபக்கம் பல வகையான நாய்களை வளர்த்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் இளங்கோவன் என்பவரின் மகள் கீர்த்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இவர்களின் திருமணம் தாமதமாவதற்கு பிரதமர் மோடி காரணம் என்றும் பிரதமர் மோடி தலைமையில் தான் தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் விரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் திருமணத்தை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விஜயகாந்த் பிரதமர் மோடி தலைமையில் மகன் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். அவரின் தேதிக்காக விஜயகாந்த் குடும்பத்தினர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.