Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் சமையல் போட்டியுடன் உணவு திருவிழா”…. நடுவராக செப். தாமு பங்கேற்பு…..!!!!!

திருப்பூரில் சமையல் போட்டியுடன் உணவு திருவிழா நடைபெற இருக்கின்றது.

திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உணவு திருவிழா வருகின்ற ஏழாம் தேதி காங்கயத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த பேரணியில் மகளிர் சுய உதவி குழுக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றார்கள். காலை 9 மணிக்கு தொடங்குகின்றது. இது காலை 9 மணிக்கு தொடங்குகின்றது.

இதையடுத்து என்.எஸ்.என் மண்டபத்தில் “திருப்பூர் உணவு திருவிழா” நடைபெறுகின்றது. இதில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரங்குகள், மாவட்ட சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசு துறையரங்குகள், மருத்துவ முகாம்கள் என 50 அரங்குகள் இடம்பெறுகின்றது. இந்நிகழ்ச்சியில் உலக சமையல் கலைஞரான செப் தாமு நடுவராக பங்கேற்று போட்டியில் சிறந்த சுவைகளை தேர்வு செய்கின்றார்.

Categories

Tech |