Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேங்காய் விலை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்…. “மீண்டும் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்படுமா….???”

தேங்காய் விலை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்படுமா என எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் இருக்கின்றது. கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்தது விவசாயிகளுக்கு கை கொடுத்து வந்த நிலையில் அரசு அறிவித்தபடி சென்ற 31ஆம் தேதி உடன் கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. வெளிச்சந்தைகளில் கொப்பரை விலை உயர்த்தததால், அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது பற்றி அதிகாரிகள் கூறியுள்ளதாவது, உடுமலை ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் செயல்பட்டு வந்த கொப்பரை கொள்முதல் மையத்தில் 953 விவசாயிகளிடமிருந்து 1310 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகின்றது. இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்கில் 13 கோடியே 87 லட்சத்து 29 ஆயிரம் செலுத்தப்பட்டிருக்கின்றது. கொப்பரை கொள்முதல் தொடருமா என்பது குறித்து இதுவரை இந்த தகவலும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |