மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் தன் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்திற்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதால் அவர் மீது குற்ற பத்திரிக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றார்.
சின்னத்திரை நடிகை சித்ரா 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவருடைய கணவர் ஹேமர் கைது செய்யப்பட்டு பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பின் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.