பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எனக்கு இதில் மிகவும் பிடித்தது மோடிஜி இடம் பிரின்சிபல் செகரட்டியாக வேலை பார்த்த நிர்பேந்திர மிஸ்ரா IAS அவர்கள் எழுதியிருக்கிறார்கள். என்னுடைய முதல் சந்திப்பு மோடிஜி அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு பதவி ஏற்பதற்கு முன்பாக அருண் ஜெட்லி அவர்கள் என்னை அழைத்தார்கள்..
மோடிஜி உன்னை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.. நீங்கள் வாருங்கள் என்று….. அது எனக்கு நேர்காணல் மாதிரி மோடிஜி என்னிடம் பேசினார். ஆனால் என்னை வந்து ஒரு பிரின்சிபல் செகரட்டரியாக போட வேண்டும் என்றாலே இந்த அரசு பல விதிகளை நிர்பந்தப்படுத்த வேண்டும், புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும். ஏனென்றால் நான் ரிட்டயர் பர்சன். என்னை மோடிஜி ஐந்து நாட்கள் கழித்து அழைத்து நீங்கள் தான் பிரின்சிபல் செக்ரெட்டரியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.
நான் அவருடன் பயணம் செய்தேன். நம்முடைய மோடிஜி அவர்களுடைய பயணத்தில்…. 2014ல்இருந்து ஒவ்வொரு திட்டமும் கூட நிர்பேந்திர மிஸ்ரா அவர்கள் கூட இருந்து அதை இயக்கியுள்ளார்கள், செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த பயணத்தை விவரிக்கிறார்கள். எப்படி மோடியின் திட்டமிடுதல் இருக்கும் ? எப்படி ஒரு ஸ்கீமை டிவைஸ் பண்ணுவார்கள் ? அந்த ஸ்கீம் உடைய இம்ப்ளிமென்டேஷன் எப்படி இருக்கும் ? ஒரு ஸ்கீமுக்கும், இன்னொரு ஸ்கீமுக்கும் எப்படிப்பட்ட தொடர்பு இருக்கும் ?
ஏனென்றால் எட்டு ஆண்டுகள் கழித்து நம் திரும்பிப் பார்க்க்கும் போது, மோடிஜினுடைய திட்டங்கள் எல்லாம் நாம் பேசுகிறோம், எவ்வளவு பெரிய திட்டங்கள், அருமையான திட்டங்கள். ஆனால் நிர்பந்தர மிஸ்ரா அவர்கள் எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு திட்டமும் அதை கொண்டு வரும்போது மோடிஜி அவர்களுக்கு அடுத்த திட்டம் என்னவென்று தெரியும், அந்தத் திட்டத்தை எப்படி இணைப்பது என்று தெரியும், அதனால் ஒவ்வொரு திட்டத்தையும் நீங்கள் தனித்தனியாக பார்க்காதீர்கள், எல்லா திட்டத்தையும் மோடி ஜி அவர்கள் முதலிலேயே திட்டமிட்டு, ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அதன் பின்பு தொடர்ந்து இன்னொரு திட்டத்தை கொண்டு வந்து மொத்தமாக இணைத்து காம்போசிட்டா பார்க்கிறார்.
இந்த எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு வீட்டை எப்படி மோடிஜி மாத்தி இருக்கிறார் என்று பார்த்தீர்கள் என்றால்… ஒரு வீட்டை கட்டியிருக்கிறார். வீட்டில் இல்லாதவர்களுக்கு, அந்த வீட்டிற்குள் கரெண்ட் கொண்டு வந்திருக்கிறார், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு வங்கிக் கணக்கில்லை என்றால் வங்கி கணக்கு கொண்டு வந்திருக்கிறார், அங்கே ஏழைகளாக இருக்கிறார் என்றால் அவர்களை தரம் உயர்த்தியிருக்கிறார். அதனால் எல்லா திட்டங்களும் தொடர்ந்து காம்போசிட் திட்டமாக இருக்கிறது என்பதை மிகவும் அற்புதமாக நிர்பேந்திர மிஸ்ரா அவர்கள் சொல்கிறார்கள், அதுவும் மிகவும் தத்ரூபமாக சொல்லிருப்பார்.
ஒரு நாள் மோடி ஜி என்னை அழைத்து சொன்னார்கள்…. என்னை பொறுத்தவரை இந்தியாவை நாம் எப்படி மாற்ற வேண்டும், இந்தியாவை மாற்றுவதற்கு நாம் எப்படி முயற்சி எடுக்க வேண்டும், என்னுடைய கனவு என்ன என்று அதைக் கேட்கும் போது நான் நினைத்தேன்… அவர் ஒரு ஒரு சாதாரண மனிதர் கிடையாது, அரசியல்வாதி எல்லாம் தாண்டி ஒரு ஆளுமை மிகுந்த தலைவன் எல்லாம் தாண்டி, ஒரு மிகப்பெரிய கனவுகளை சுமந்து கொண்டு அதை நினைவாக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற ஆதர்ஷிய புருஷன் என்று எழுதி இருக்கிறார் என தெரிவித்தார்.