அதிமுகவுக்கு சசிகலா, டிடிவி தினகரன் வந்தால் வரவேற்போம் என திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசியல் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தேனி பழனிசெட்டியில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சையது கான் தலைமை தாங்கியுள்ளார். முன்னதாக சையது கான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தேனி எம்பி ரவிந்திரநாத்தை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேட்டிருக்கின்றார். இந்த கருத்து மட்டும் இல்லை அனைவருக்குமே பொருந்தும் கட்சி ஒன்றாக இருக்கும் போது அனைவரும் வெற்றி பெறுவோம் இன்று கட்சி இரண்டாக பிளவு பட்டிருக்கிறது.
அதிமுகவினர் பெற்ற வெற்றி என்பது தனிப்பட்ட நபரால் கிடைத்தது அல்ல கட்சியின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி உதயகுமார் முதலில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா? அவர் மட்டுமல்லாமல் இதுபோல் பேசும் மற்றவர்களும் ராஜினாமா செய்து விட்டு போட்டியிட தயார் என்றால் நாங்களும் தயார். தேனியில் நேற்று முன்தினம் ஆர் பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் என சொல்லிவிட்டு 100% ஓ பன்னீர் செல்வத்தை திட்டுவதற்கு கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்திலும் தொண்டர்களை வைத்து கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்கு ஆர்வி உதயகுமார் தன்னுடன் 60 கார்களில் ஆட்களை கூட்டி வந்துள்ளார். இந்த கூட்டத்திற்கு அனைவருமே கூறியது போல ஆராயிரம் ஏழாயிரம் பேர் எல்லாம் வரவில்லை. மேலும் 6 மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 2500 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். தேனி மாவட்ட அதிமுக எப்போதும் ஓ பன்னீர்செல்வத்தின் கோட்டையாக தான் இருக்கிறது. சசிகலாவின் தயவால் ஆர் பி உதயகுமார் அமைச்சரானார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதன் பின் சசிகலாவிற்கு துரோகம் செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து கொண்டார் காலத்திற்கு ஏற்ப சுயநலத்தோடு முடிவு எடுப்பார் எடப்பாடி பழனிசாமியை சசிகலா தான் முதலமைச்சராகி உள்ளார். ஆனால் சசிகலாவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து வருகின்றார். ஓ பன்னீர்செல்வம் துரோகி என ஆர்பி உதயகுமாரும் எடப்பாடி பழனிசாமியும் கூறி வருகின்றார்கள். உண்மையாக எடப்பாடி பழனிசாமி ஆர் வி உதயகுமார் இருவரும் துரோகிகள் தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் வீட்டை சூறையாடுவோம் என ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர் பி உதயகுமார் வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால் வந்து பார்க்கட்டும். சசிகலா மற்றும் தினகரன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம். ஆனால் அவர்கள் ஏற்கனவே அதிமுகவினர் தான் ஜெயலலிதாவுடன் வாழ்நாள் முழுவதும் உடன் இருந்தவர் சசிகலா. சசிகலா தினகரன் இருவரும் அதிமுகவில் இணைய வேண்டும் என்பது எனது கருத்து அவர்களுக்கு என்ன பதவிகள் வழங்கப்படும் என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்கின்றார் என மாவட்ட செயலர் சையது கான் தெரிவித்துள்ளார்.