அல்கொய்தா அமைப்பின் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளை அனைத்தும் அச்சுறுத்தும் விதமாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்காவின் சீல் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு மறுத்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் சீல் படையினர் நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இன்று இரவு கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.