Categories
மாநில செய்திகள்

ரூ.20,000 கோடியில் புதிய விமான நிலையம்….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

20 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியீட்டு விழா அறிக்கையில் தெரிவித்ததாவது: “தற்போதைய சென்னை விமானநிலையம் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள விமானநிலையம் ஆகியஇரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமையவுள்ள விமானநிலையம், 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது.

இரண்டு ஓடுதளங்கள் (Runways), விமானநிலைய முனையங்கள் (Terminal Buildings), இணைப்புப்பாதைகள் (Taxiways), விமானங்கள் நிறுத்துமிடம் (Apron), சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தப்பின் புதிய விமானநிலையத்திற்கான திட்டமதிப்பு இறுதி செய்யப்படும். தற்போதைய உத்தேச திட்டமதிப்பு 20,000 கோடி ரூபாய் ஆகும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |