தமிழகத்தில் இன்றைய சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவு கடலில் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா நடைபெற உள்ளது. சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த விழா மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. அவற்றில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
அதிலும் குறிப்பாக சமையல் கலைகள் பற்றிய விரிவான பரிந்துரைகள், பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் 1500 குழந்தைகளுக்கு அடுப்பில்லாமல் எவ்வாறு சமைப்பது போன்றவை, உணவுகளை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ஆகியவற்றை விளக்கும் விதமாக பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை கலைஞர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு சென்னை மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.