Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆடி கல்லு படையல் விழா”… ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சி…. பின் நடந்த நிகழ்வு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகேயுள்ள வீரசூடாமணிபட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி போன்ற 3 கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துமுளி சுவாமி கோயிலில் கல்லு படையல் வருடந்தோறும் ஆடி மாதம் நடைபெறும். அதன்படி இந்த வருடமும் ஐந்துமுளி சுவாமி ஆடி கல்லு படையல் விழாவையொட்டி பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 கிடாய் மற்றும் 800 சேவல்கள் கோயில் அருகே பலியிடப்பட்டது. இப்படையலின் சிறப்பு அம்சம் 3 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்று பலியிடப்பட்ட கிடாய், சேவல்களை சுத்தம்செய்து அடுப்பில் மண் கலயத்தில் உப்பு, வேப்ப இலைகள் போட்டு சமைப்பார்கள்.

அதன்பின் அந்த அசைவ உணவை, கோயிலின் முன்பு சுவாமிக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வார்கள். இந்தபடையல் நிகழ்ச்சியில் பக்கத்து ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட இஸ்லாமியர் சிறப்பு தொழுகை அதாவது சர்க்கரை மாற்றும் நிகழ்ச்சியானது நடைபெறும். அவ்வாறு படையல் பூஜைகள் முடிந்த பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அசைவ விருந்தில் பங்கேற்கலாம். அப்போது உப்பு, வேப்பிலைகளால் மட்டுமே சமைக்கபட்ட கறி மட்டுமே பரிமாறப்படும். இந்நிகழ்ச்சியில் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.

Categories

Tech |