Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி செயல்பட்ட 21 வாகனங்கள்…. ரூ. 1.56 லட்சம் அபராதம்…. அதிகாரிகள் அதிரடி….!!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் பகுதி வழியாக அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வாகனங்கள் வருவதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சில ஆம்னி பேருந்துகள் இயங்குவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு பாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அதிக பாரங்கள் ஏற்றிக் கொண்டு வந்த சில சரக்கு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதன் பிறகு உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த மினி பஸ்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாகனங்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வாகனங்களுக்கும் அபராதமும், வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1,28,150 அபராதமும், ரூ. 1,27,800 வரியும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மினி பேருந்துகளில் வந்த பொதுமக்கள் வேறு வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |