Categories
சினிமா தமிழ் சினிமா

“இதெல்லாம் ஒரு படமா….?” பதிலாக அமைந்த லெஜண்ட் வெளியிட்ட வீடியோ….!!!!!!

தி லெஜெண்ட் திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்தவர்களுக்கு சரவணன் வெளியிட்ட வீடியோ பதிலாக அமைந்திருக்கின்றது.

சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன் விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதி திரையில் படம் வெளியானது. படம் வெளியாகி பலவிதமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. படத்தின் கதை சரியில்லை எனவும் சரவணன் அருள் நன்றாக நடிக்கவில்லை எனவும் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தனது நடிப்பு பற்றியும் படம் பற்றியும் லெஜண்ட் சரவணன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் கூறியுள்ளதாவது, ஒரு இரண்டு, மூன்று முறை பார்த்தால்தான் படம் பார்த்துட்டோம் என்கின்ற திருப்தி இருக்கும். இது ஒரு மாஸ், ஆக்சன், கமர்சியல் படம் என கூறியுள்ளார். பான்இந்தியா திரைப்படமாக வெளியிட்ட நிலையில் அதை சர்வதேச அளவில் கொண்டு செல்ல முடிவு செய்து இருக்கின்ற சரவணன் அருள் இவர் முதல் படத்தை நல்லபடியாக எடுத்த திருப்தியில் அடுத்த படவேலையில் இறங்கியுள்ளார்.

Categories

Tech |