Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை”…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…..!!!!!!

தங்கும் விடுதி உரிமையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள ஜக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் போடியில் தங்கும் விடுதி நடத்தி வந்த நிலையில் நேற்று இவர் விடுதியிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி தபால் நிலையம் அருகே சென்ற பொழுது அங்குள்ள கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டிருந்தார். அங்கு திடீரென ஜீப்பில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அறிவால் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.

இதில் அவர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்த பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |