Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படாதது எதற்ககாக…? திமுக அரசின் மீது அன்புமணி கடும் சாடல்….!!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து பாமக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டங்களை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தாதது எதற்காக என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது, இயற்றப்பட்ட சட்டங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தினால் கடந்த ஒரு வருடத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களினால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நநிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சூதாட்டத்தை தடை செய்வதற்கு புதிய சட்டத்தை இயற்றியிருப்பதாக சட்ட அமைச்சர் ரகுபதி அறிவித்தார். ஆனால் ஒரு வருடம் நிறைவடைந்தும் சூதாட்ட தடைச் சட்டம் இயற்றப்படவில்லை. இந்த ஆன்லைன் சூதாட்டத்தினால் 27 பேர் உயிரிழந்ததோடு, ஏராளமான குடும்பங்கள் குடும்ப தலைவரை இழந்து தவிக்கிறது. இவ்வளவு பெரிய சீரழிவிற்கும் பிறகும் சட்டங்களை தமிழக அரசு இயற்றாமல் காலம் தாழ்த்துவது எதற்காக என்பது தெரியவில்லை. இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினே கூறியுள்ளார்.

இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்திருந்தால் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது இயற்றியிருக்கலாம். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதே தவிர வேறு எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் ஒரு அறிக்கை கூட அனுப்பப்படவில்லை. மேலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்கா விட்டால் பாமக சார்பில் தமிழக முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |