Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தேவையற்றதை நீக்க வேண்டும்” வாகன நெரிசல்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

சாலையோரம் தேவையற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள சாலையோர பகுதிகளில் அங்கங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சாலைகளில் நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றது. இதில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 50 லட்சம் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டு வருகின்றது.

அதன்பின் கல்லூரி மற்றும் பள்ளிகள் பேருந்துகள், தனியார் பேருந்துகள், வேன்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றது. இதனால் அதிகமாக சாலைகளில் நெரிசல் ஏற்படுகின்றது. பின்னர் மெட்ரோ ரயில் பயணிகள் நடக்க ஆரம்பித்ததும் பல இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாமல் அதனால் முக்கிய இடங்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள் படும் அவதிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இம்மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் தெருவோர மற்றும் சாலையோர வாகன ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்டும் காணாதது போல இருக்கின்றனர். இதனை முறைப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பிருப்பதாகவும், சாலையோரங்களில் தேவையற்ற மற்றும் வீணாக கிடக்கும் பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |