Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களே….. நாளை முதல் இணையதளத்தில்….. உடனே முந்துங்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு செய்யப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அதனால் முன்கூட்டியே தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாக இருப்பதை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அந்த வகையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 7-ம் தேதி முதல் 10ம் தேதி வரை விரைவு தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு நாளை தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |