Categories
உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்ட அறிக்கை… தைவான் செல்கிறாரா?… எழுந்துள்ள சர்ச்சை…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி தைவான்  நாட்டிற்கு செல்வதாக அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார். இதனை சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் கடுமையாக எதிர்த்ததோடு தைவான் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நேற்று நான்சி பெலோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பல பிரச்சனைகள் பற்றி ஆலோசனை செய்வதற்காக ஜப்பான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு செல்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். எனினும் இறுதியில் அவர் தைவான் நாட்டிற்கும் செல்ல வாய்ப்புகள் உள்ளது என்பதால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |