கனடா நாட்டில் மகள் திருமணத்துக்கு பணத்தை எப்படி தயார் செய்வது என்று எதிர்பார்த்திருந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. நியூ பிரன்ஸ்விக்கில் வசித்து வருபவர் டொனா ஸ்டீவ்ஸ். இவர் அண்மையில் லொட்டோ 6/49 லாட்டரி டிக்கெட் வாங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டொனா மளிகை கடைக்கு சென்றார். அங்கு தான் சில வாரங்களுக்கு முன்பு வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்ததா என பார்க்க முடிவுசெய்தார்.
இந்நிலையில்தான் அவருக்கு கனேடிய $1 மில்லியன் (ரூ.28,00,49,264.80) பரிசு விழுந்தது தெரியவந்தது. இது தொடர்பாக டொனா கூறியதாவது “மளிகை கடைக்கு சென்றது என அதிர்ஷ்டமாக மாறி விட்டது. பரிசு விழுந்த தகவலை எனது மகளிடம் கூறினேன். என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதுபோன்ற சமயத்தில் பணம் கைக்கு வந்துள்ளது. ஆகவே இதை வைத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவேன். மேலும் புதிய வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என கூறியுள்ளார்.