Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் கொடூரம்… பெண் காவலரை சிறை கைதிக்கு இரையாக்கிய அதிகாரிகள்….!!!

இஸ்ரேல் நாட்டில் அதிகாரிகள் பெண் காவலரை பாலஸ்தீன நாட்டின் சிறை கைதிக்கு பாலியல் இரையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் அரசு தங்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களில் தொடர்புடைய பாலஸ்தீன கைதிகள் பலரை கில்போவா சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நிசிம் பினிஷ் என்ற சிறை அதிகாரியின் பதவியில், அங்கு பணிபுரிந்த ஒரு பெண் காவலர் மேல் அதிகாரிகளின் உத்தரவால் பாதுகாப்பு குறித்த குற்றங்களை செய்த பாலஸ்தீன கைதியால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் அந்த பெண் காவலர் தெரிவித்ததாவது, என்னுடன் பணி புரிந்த சக ஊழியர்கள், என் தளபதிகள், என்னை காப்பார்கள் என்று நான் நம்பியவர்கள் தான் என்னை அந்த தீவிரவாதியிடம் ஒப்படைத்தார்கள் என்று கடும் வேதனையுடன் கூறியிருக்கிறார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து நாட்டு பிரதமர் யாயிர் லபிட் கூறுகையில், ராணுவ வீரர் ஒருவர் பணியில் இருக்கும் போது தீவிரவாதியால் வன்கொடுமை அனுபவிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |