Categories
உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் “ஹீரோ” மரணம்… நாட்டிற்கு பெரும் இழப்பு… அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம்…!!!

உக்ரைன் நாட்டிலுள்ள மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத் தலைவர் மற்றும் அவரின் மனைவி இருவரும் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மிகோலைவ் என்ற பகுதியில் ரஷ்யபடையினர் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதில் உக்ரைன் நாட்டின் ஹீரோ என்ற விருதைப் பெற்றவரும் நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபராகவும் விளங்கும் ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரின் மனைவி ரெய்சா இருவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், நிபுலான் என்னும் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரின் நிறுவனம் தான் நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. இவரின் மரணம் நாட்டிற்கே பெரும் இழப்பு என்று அதிபர் ஜெலன்ஸ்கி  தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |