ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய திட்டத்தில் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
தற்போது EPFO மூலம் ஓய்வூதியம் பெறும் தாங்கள் உயிருடன் உள்ளோம் என்பதை உறுதி செய்ய ஆயுள் சான்றிதழை சமர்பித்து வருகின்றனர். இந்த சான்றிதழ் பயோமெட்ரிக் முறை வழங்கப்படும். இதற்கு பதிலாக முதியவர்களின் முகத்தை ஸ்கேன் செய்து ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.