மேற்குவங்க மாநிலம் கூச் பிகார் பகுதியில் வேன் ஒன்றில் கன்வர் யாத்திரை சென்ற 27 பக்தர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இருந்த DJ சிஸ்டத்தில் இருந்த வயர் ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டு தான் முழுவதும் மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் வேனில் இருந்த பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . பலர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் அவர்கள் சங்ரபந்தா மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அதில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக ஜல்பைகுரி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 10 உயிரிழந்ததவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,அமித் வர்மா தெரிவித்துள்ளார். வேனை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிய நிலையில் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.