ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் மாவட்டம் வழியாக செல்லும். இந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
அதில் மொத்தம் 9 கிலோ இருந்தது. இந்த கஞ்சாவை யார் கடத்தி வந்தார்கள் என்பது தெரியவில்லை.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயில்களில் அடிக்கடி கஞ்சா கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் காரணமாக ரயில்வே காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.