ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரிச்சம்பழம் பண்ணையை ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அத்தியூத்து கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் முகமது இஷாத் என்ற பயனாளி தோட்டத்தில் ரூபாய் 8790 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா செடிகளையும் 4920 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள மா செடிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
இதையடுத்து அழகன்குளம் கிராமத்தில் சிற்பம் கட்டும் அறையினையும் என்மனம்கொண்டான் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்டு வரும் மா மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவற்றையும் பேரிச்சம் பழம் பண்ணையினையும் ஆய்வு செய்தார். பின் அரியமான் கிராமத்தில் கொய்யா, மா, சப்போட்டா போன்றவற்றை வளர்க்கப்பட்டு வருவதையும் நொச்சியூரணி கிராமத்தில் மல்லிகை பூ தோட்டத்தினையும் தெற்கு சுந்தரவை கிராமத்தில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் பார்வையிட்டார்.