தமிழகத்திலுள்ள ஏழை-எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மலிவு விலை பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அத்துடன் ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவ்வப்போது தமிழக அரசின் சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடை ஊழியர்களின் குறைகள் அவ்வப்போது கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் விருதுநகரிலுள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் ரேஷன்கடை ஊழியர்களின் குறைதீர் கூட்டமானது நடந்தது. அதன்பின் குறைதீர் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கினாலும்கூட அரியர்ஸ் தொகை வழங்கப்படவில்லை என்று குற்றசாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ரேஷன் ஊழியர்களுக்கு இடம்மாறுதல் செய்ய வேண்டும் என்றும் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் எடை குறைவின்றி சரியான அளவில் தரமாக வழங்க வேண்டும் எனவும் ரேஷன் பொருட்கள் அனைத்தும் பாக்கெட் முறையில் வழங்க வேண்டும் எனவும் அம்மா மருந்தகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும் என்பது குறித்தான அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.