Categories
மாநில செய்திகள்

மை இல்லாத பேனாவால் என்ன பயன்….? திமுகவின் முடிவிற்கு கலவையான விமர்சனங்கள்….!!!!!!!!

முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முன்னாள் முதல்வர் கருணாநிதியை கவுரவப்படுத்தும் விதமாக கடலில் பேனா ஒன்றை சிலையாக நிறுவ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் அரசு சார்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த முடிவிற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த சூழலில் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற அந்த கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறிய போது, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. திமுக அரசின் செயல்பாடு சரியில்லாததால்  தான் கலவரம் வன்முறை ஏற்பட்டிருக்கிறது.

அந்த கட்சி ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மேலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என கூறும் முதல்வர் ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது? இதனால்  யாருக்கும் எந்த பயனும் இல்லை. கடவுள் மறுப்பு உள்ளிட்டவை திராவிடத்தில் தான் இருக்கிறது. திராவிட மாடல் என்பதை இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவது தான் ஆன்மீக அரசியல் எதிர்ப்பு கொள்கை தான் திமுகவில் இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |