Categories
தேசிய செய்திகள்

மக்களே!… நாளை முதல் புது விதிகள், மாற்றங்கள் அமல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை காரணமாக மூடப்பட இருக்கிறது. அத்துடன் பேங்க் ஆப் பரோடாவின் விதிகளில் சில மாற்றங்கள் வர இருக்கிறது. அந்த வகையில் பணம் செலுத்தும் முறையை சரிபார்க்கவும் மற்றும் நேர்மறை ஊதியமுறை (PPS) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாற்றங்களை குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 5,00,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு கட்டாய PPS-ஐ அறிமுகப்படுத்த பேங்க் ஆப் பரோடா முன்வந்து உள்ளது. அதிலும் குறிப்பாக, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்கு முன்பு அங்கீகரிப்புக்கான முக்கிய காசோலைத் தகவலை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க வேண்டும்.

அதுமட்டுமின்றி மோசடியான பரிவர்த்தனைகளிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதன் வாயிலாக இந்த அமைப்பு வங்கியின் பாதுகாப்பை மேம்படுத்தும். 5 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான காசோலைகள் பணம் செலுத்துவதற்கு முன்னதாகவே உறுதி செய்யப்படுகிறது என பாங்க் ஆப் பரோடா தன் வாடிக்கையாளர்களுக்கு சமூகஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் பரோடா போன்றவை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன் அதிக மதிப்புள்ள காசோலைகளை பணமாக்குவதற்கு பிபிஎஸ் திட்டத்தைப் பற்றி தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கைகளை வழங்கியது.

ரிசர்வ்வங்கியின் இணையதளத்தின் படி பெரிய மதிப்பு காசோலைகளின் முக்கிய விபரங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் செயல்முறை பிபிஎஸ் முறையில் இருக்கிறது. இந்த செயல்பாட்டில் காசோலை வழங்குவோர் பெயர், தேதி, தொகை ஆகிய குறைந்தபட்ச விபரங்களை மொபைல் பயன்பாடு, எஸ்எம்எஸ், UPI (அல்லது) ஏடிஎம் வாயிலாக மின்னணுமுறையில் சமர்ப்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பணம் செலுத்துவதற்கென காசோலையை பிற வங்கிக்கு வழங்கும் போது, விபரங்கள் சரிபார்க்கப்படும். டெபாசிட்டருக்கு செலுத்தவேண்டிய கட்டணத்துக்கான விபரங்கள் பொருந்த வேண்டும்.

இல்லையென்றால் காசோலை செலுத்தப்படாமல் திருப்பித்தரப்படும். இந்த அமைப்பு பாதுகாப்பான மற்றும் சரிபார்க்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்காக NPCI ஆல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அடுத்தமாதம் (ஆகஸ்ட்) எல்.பி.ஜி எரிவாயுசிலிண்டர் விலையானது கடுமையாக உயர்த்தப்பட உள்ளது. பிரதான்மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூபாய்.200 மானியம் அறிவிக்கப்பட்டாலும், ரூ.853 என்பது 7 வருடங்களுக்கு முன் செலுத்தப்பட்ட தொகையைவிட 2 மடங்கு அதிகம். பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி விலையை தீர்மானிக்கிறது. இதன் காரணமாக சிலிண்டர் விலையானது உயர்த்தப்படலாம் என தகவல் தெரிவிக்கிறது.

Categories

Tech |