இன்றைய காலகட்டத்தில் பலரும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் செயல்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இந்நிலையில் தவறுதலாக உங்களின் போன் தொலைந்தால் வங்கி கணக்குகளும் ஆபத்தில் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ ஐடிகளை உடனே எப்படி பிளாக் செய்ய வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம்.
Google Pay கணக்கை பிளாக் செய்யும் முறை:
வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்கு யூசர்கள் 18004190157 என்ற எண்ணில் அழைத்து, சேவை மைய அதிகாரி உங்களின் தகவல்களை சரிபார்த்து கூகுள் பே அக்கவுண்டை முடக்க உதவி செய்வார்.
PhonePe கணக்குகளை பிளாக் செய்யும் முறை-
08068727374 அல்லது 02268727374 என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும்.பின்னர் சிம் மற்றும் மொபைல் தொலைந்துவிட்டது என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். எக்ஸிகியூட்டிவ் உங்களிடம் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கடைசியாக பணம் செலுத்திய தகவல் மற்றும் பரிவர்த்தனை மதிப்பு போன்ற விவரங்களைக் கேட்டு உங்கள் PhonePe கணக்கைத் பிளாக் செய்வார்.
Paytm கணக்கை பிளாக் செய்யும் முறை-
முதலில் Paytm Payments Bank உதவி எண்ணை 01204456456 என்ற எண்ணிற்கு அழைத்து, தொலைந்துபோன தொலைபேசி என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும். மாற்று தொலைபேசி எண் என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களின் தொலைந்த தொலைபேசி எண்ணை பதிவிட வேண்டும். பின்னர் ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேறும் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் பின் Paytm இணையதளத்திற்குச் சென்று 24×7 உதவியைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Report a Fraud என்பதைத் தேர்ந்தெடுத்து உங்களின் Issues ஆப்சனில் புகாரை பதிவிட வேண்டும். பின்னர் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். Paytm உங்கள் கணக்கைச் சரிபார்த்து தற்காலிகமாக பிளாக் செய்துவிடும்.