Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடன கலைஞரை கொல்ல முயன்ற 4 பேர்…. என்ன காரணமாக இருக்கும்?….. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் நெட்டுத்தெருவில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மோகன் பிரகாஷ்(24). இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் நடனப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடன மையத்துக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வலிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மோகன் பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், மோகன் பிரகாஷ், கங்கன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து நடன பயிற்சி மையை தொடங்கியுள்ளனர். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் தமிழ்ச்செல்வன் தனது பங்கு தொகையை கேட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் தமிழ்செல்வன் தனது நண்பர்களான சங்கர் கார்த்திக்(22), தமிழரசன்(22) மற்றும் 18 வயதை நிரம்பாத சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |