குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாக போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் இதுவரை 101 பேர் மீது குண்டம் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக 80 பேர் மீதும், ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகள் விற்றதாக 11 பேர் மீதும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேர் மீதும், பெண்களை ஆபாசமாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஒருவர் மீதும், இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் மீதும், கள்ள சந்தையில் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஒருவர் மீதும் மொத்தமாக 7 மாதங்களில் இதுவரை 101 நபர்களை குண்டர் தடுத்து சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல நடவடிக்கையை காரணமாக கடந்த வருடம் விட நடப்பாண்டில் கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து இருக்கிறது என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.