Categories
தேசிய செய்திகள்

பப்ஜி பிரியர்களுக்கான பி.ஜி.எம்.ஐ கேம்….. இந்தியாவில் செயலிக்கு தடை…. வெளியான தகவல்….!!!

பிஜிஎம்ஐ செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு எல்லையில் மோதல் ஏற்பட்ட போது சீனாவின் செயலிகள் இந்தியாவிற்கு பாதகம் விளைவிப்பதாக கருதி மத்திய அரசு சீனாவின் 118 செயலிகளை முடக்கியது. இந்த செயலிகளுடன் பப்ஜிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த பப்ஜியை முடக்க வேண்டும் என ஏற்கனவே ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பப்ஜி செயலி முடக்கப்பட்டதால் பலர் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் சீனாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக கூறிய தென்கொரியாவை சேர்ந்த பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த பிஜிஎம்ஐ என்ற கேமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

இந்த செயலியை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த‌ பெண்மணி தன்னுடைய 16 வயது மகனிடம் கேம் விளையாட கூடாது என்று கூறியதால், கோபத்தில் தாய் என்று கூட பாராமல் அந்த சிறுவன் தன்னுடைய தாயை சுட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், பிஜிஎம்ஐ என்ற பப்ஜி செயலியை கூகுள் நிறுவனம் ஆப்பிள் பிளே ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்‌ தடை செய்யப்பட்ட செயலிகள் மாற்று பெயரில் இந்தியாவில் அறிமுகமாவது மிகவும் வேதனையை அளிக்கிறது என்றும், இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

Categories

Tech |