Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளியில் முகாம்…. மக்கள் பங்கேற்பு…. யூனியன் தலைவரின் செயல்….!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வருமுன் காப்போம் திட்டம் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் யூனியன் தலைவர் சின்னையா தலைமையில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு வரவேற்புரை ஆற்றியுள்ளார்.

இதனை அடுத்து வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து நோயாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த முகாமில் 756 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் பெண்களுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

பிறகு 52 பேருக்கு எக்ஸ்-ரே மற்றும் 46 பேருக்கு இ.சி.ஜி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தொண்டை பிரிவு மகப்பேறு, குழந்தைகள் நலம், இதய நோய், காது, மூக்கு, தோல் பிரிவு உள்பட பல பிரிவுகளின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

Categories

Tech |