தமிழ் திரையுலகில் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை எனும் படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தனுஸ்ரீ தத்தா. இவர் கடந்த 2018 ஆம் வருடம் ஒரு போட்டியில் தான் 2009 ஆம் வருடம் நடந்த படப் பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்பத்திற்கு ஆளானேன் என குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் நானா படேகர் பற்றி பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் மீடு விவகாரத்தில் நான் மீண்டும் குற்றம் சாட்டப்பட்ட நானா பட்டேகர் அவரது வழக்கறிஞர் மட்டும் பாலிவுட் நண்பர்கள் இவர்கள் அனைவரும் தான் காரணம். ஹாலிவுட் மாபியா என்றால் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் அனைவரின் பெயர்களும் அடிக்கடி வந்த அதே நபர்கள் தான் அவர்களின் திரைப்படங்களை பார்க்காதீர்கள். அவற்றை முற்றிலுமாக புறக்கணித்து விடுங்கள். மேலும் கொடூரமாக பழிவாங்கும் எண்ணத்துடன் பின் தொடராதீர்கள் என குறிப்பிட்டு இருக்கின்றார். இந்தநிலையில் என்னைப் பற்றி போலி செய்திகளை பரப்பிய அனைத்து தொழில்துறை நபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டமும் நீதியும் என்னை தவற விட்டிருக்கலாம். ஆனால் இந்த மாபெரும் தேசத்தின் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார். ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தனுஸ்ரீ தத்தா கடந்த வாரமும் தனது இன்ஸ்டாகிராமில் இதே போல் ஒரு பதிவு பகிர்ந்து இருந்தார். அதில் நான் மிகவும் துன்புறுத்தப்பட்டு மோசமான குறிவைக்கப்படுகின்றேன் தயவு செய்து யாராவது ஏதாவது செய்யுங்கள் என குறிப்பிட்டு ஒரு நீண்ட பதிவு ஒன்றே பகிர்ந்து இருந்தார். இந்த சூழலில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானா பற்றி பகிர்ந்துள்ள பதிவு இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.