தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்த ஊர்வசி ரவுத்தலாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தி லெஜெண்ட். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படமானது தமிழகம் எங்கும் உள்ள 200க்கும் அதிகமான திரையரங்கில் சென்ற 28-ம் தேதி வெளியாகி உள்ளது. கதாநாயகியாக ஊர்வசி ரவுத்தலா நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியானதிலிருந்து இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தி லெஜெண்ட் படத்திற்கு நாயகி ஊர்வசி ரவுத்தலா எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் நடித்ததற்கு ரூபாய் 20 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள், அண்ணாச்சி இந்த பணத்தையாவது திரும்பி எடுப்பாரா? என கிண்டலாக விமர்சனம் செய்து வருகின்றார்கள்.