தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மனநலம் மற்றும் உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,கள்ளக்குறிச்சி கணியம்பூர் தனியார் பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் மாற்றுப் பள்ளியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மனநலம் மற்றும் உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.