Categories
தேசிய செய்திகள்

வரிசையில் நிற்கவைத்து பளார்…. சீனியர் மாணவர்களை ராகிங் செய்யும் ஜூனியர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!

கல்லூரிகளுக்குப் புதிதாக வரும் மாணவர்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் ராகிங் முறையைத் தடுக்க  பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன. இருந்தாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ராகிங் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மாணவர்கள் மன ரீதியாகவும் காயப்படுகின்றனர்.

இந்தூரை அடுத்த மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் அரசு மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை ராகிங் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் வரிசையாக நிற்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரிசையாக கன்னத்தில் அறைந்தபடி செல்கிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த வார்டன் டாக்டர் அனுராக் ஜெயின் மீது மூத்த மாணவர்கள் மது பாட்டில்களை வீசியுள்ளனர்.

சீனியர் மாணவர்களின் இந்தச் செயலை ஒருகட்டத்திற்கு மேல் தாங்க முடியாத ஜூனியர்கள் யுஜிசிக்கு புகார் அளித்தனர். போலீசாரிடமும் இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். அப்போது சீனியர்கள் தங்களை என்னவெல்லாம் செய்யச் சொன்னார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அனைவரிடமும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சீனியர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிதெரிவித்துள்ளார். மேலும் ராகிங் தொடர்பான வாட்ஸ்அப் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |