தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை. ஆகையால், ஞாயிற்றுக்கிழமை 31/07/2022 அன்று மொஹரம் மாத முதல் பிறை எனக் கணக்கிட்டு, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மொஹரம் பண்டிகையான ஆகஸ்ட் 9-ம் தேதி (செவ்வாய்) அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
மொஹரம் பண்டிகை சந்திரனை பார்க்கும் தேதியை பொறுத்துக் கொண்டாடப்படுகின்றது. 355 நாட்கள் அல்லது 354 நாட்களை கொண்ட ஹஜிரி நாட்காட்டியின் படி மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கையின் படி கடவுளின் தூதராக கருதப்பட்ட முகமது நபி மொஹரம் மாதத்தை அல்லாஹ்வின் புனித மாதம் என அழைக்கின்றனர். அதன்படி தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று இரவு தமிழ்நாடு தலைமை ஹாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை மொஹரம் மாதத்தின் முதல் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை அன்று மொகரம் மாத முதல் பிறை என கணக்கிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.