Categories
உலக செய்திகள்

கருந்தவளை, பழுப்பு மரப்பாம்புகளால்…. பொருளாதாரத்தில் 1.27 லட்சம் கோடி ரூபாய் இழப்பு…!!!

அமெரிக்க நாட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பழுப்பு மர பாம்பு மற்றும் கருந்தவளை போன்ற இரண்டு உயிரினங்களால் 34 வருடங்களில் சர்வதேச பொருளாதாரத்தில் 1600 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டின் சயன்டிஃபிக் ரிப்போா்ட்ஸ் என்ற அறிவியல் இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அமெரிக்க நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பழுப்பு மரப்பாம்பு மற்றும் கருந்தவளை போன்ற இரண்டு உயிரினங்கள் பயிர்களை நாசம் செய்வது, மின்தடையை ஏற்படுத்துவது என்று பல வழிகளில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் பசிபிக் தீவுகளுக்கு அமெரிக்க படை கொண்டு வந்த  இந்த இரண்டு உயிரினங்களும் பல மடங்குகளாக கட்டுப்படுத்த முடியாத வகையில் பெருகிவிட்டது. இதனால் இயற்கை பாழாகி வருவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |