பிரான்சில் உருவான காட்டுத்தீக்கு காரணமான நபர் யார் என்பது தெரிய வந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற காரணமாக அமைந்த காட்டுத்தீ உருவாக்கியவர் ஒரு தீயணைப்பு வீரர் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கடுமையான அதிர்ச்சி உருவாகி இருக்கிறது. ஏற்கனவே மக்கள் வெப்பத்தால் சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில் சென்ற வாரம் பல இடங்களில் பற்றிய காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் அந்த காட்டுத்தீ தானாக உருவானது அல்ல. அது ஒரு நபர் அந்த காட்டுத்தீயை உருவாக்கியுள்ளார் என்ற செய்தி தெரிய வரவே மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்த நபர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் யார் என்பது தெரிய வந்தபோது மக்களுக்கு மட்டுமல்ல தீயை அணைக்க போராடிய தீயணைப்பு துறையினருக்கும் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அந்த காட்டுத்தீயை உருவாக்கியதற்கு காரணம் ஒரு தீயணைப்பு வீரர். Herault பகுதியை சேர்ந்த அந்த நபர் ஒரு தன்னால்வலர் தீயணைப்பு வீரராக பணிபுரிவதாக போலீசார் கூறியுள்ளனர். ஏதோ ஒரு உந்துதலில் தன்னைப் பற்றி புறக்கணிக்கும் தன் குடும்பத்தினர் முன் தன்னை நிரூபித்து காட்டுவதற்காக தான் தீ வைத்ததாகவும் தான் தீ வைப்பதற்கு அடிமைப்பட்டு விட்டதாகவும் பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். 30 வயதில் இருக்கும் அந்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். அவருக்கு 15 வருடம் சிறையும் 150, 000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.