ஈரானின் தலைநகரான டெஹ்ரான் உட்பட 31மாகாணங்களில் சென்ற 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 400 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அத்துடன் ஆல்போர்ஸ் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரையிலும் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 16 பேரை காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தெஹ்ரானின் வடக்கு பகுதிகளில் இன்னும் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும்பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.