Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் நடந்த மிகப்பெரிய வங்கி கொள்ளை…. பல மில்லியன் தொகையுடன் தப்பிய பெண்…!!!

ரஷ்ய நாட்டில் ஒரு பெண் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து 7 மில்லியன் பவுண்டுகள் கொள்ளை அடித்து விட்டு தப்பிய நிலையில், தற்போது விசாரணையை சந்திக்கவிருக்கிறார்.

சைபீரியன் வங்கியில் பணிபுரிந்த Inessa Brandenburg  என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடத்தில் 7 மில்லியன் பவுண்டுகளை கொள்ளையடித்துவிட்டு ஸ்பெயினிற்கு தப்பினார். இதற்கிடையில் வங்கி பெட்டகத்தில் சுமார் 561 மில்லியன் ரூபிள் தொகை காணாமல் போனதை ஒரு பணியாளர் கண்டுபிடித்திருக்கிறார்.

அந்த பெட்டகத்தில் பணத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த  வருடம் செப்டம்பர் மாதத்தில் அவர் ஸ்பெயினில் இருப்பது தெரிய வந்தது. எனவே, சுமார் நான்கு வருடங்கள் கழித்து அந்த பெண் விசாரணைக்காக ரஷ்யா வர இருக்கிறார்.

இந்த நூற்றாண்டில் மிகப்பெரும் கொள்ளையாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, அந்த பெண்ணின் நண்பர் தான். அவர் தான் திட்டமிட்டு அந்த பெண்ணை வங்கி இயக்குனர்கள் குழுவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அதன் பிறகு வங்கி தன் கட்டுப்பாட்டில் வந்தவுடன் சுமார் ஒன்பது பைகளில் பணத்தை நிரப்பி கொண்டு ஒரு உதவியாளர் மூலம் வங்கிக்கு வெளியே கொண்டு சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த பெண் தப்பி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அந்த பெண்ணை மாட்ரிக் அதிகாரிகள், ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

Categories

Tech |