அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேர முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி கம்ப்யூட்டர் மற்றும் சுகர் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு முதல் சுழற்சியில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு சிவில் மற்றும் மெக்கானிக்கல் தமிழ் வழியிலும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளுக்கு 2-ம் சுழற்சியில் விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து பகுதி நேரத்தில் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பயிலும் ஆண் பெண் என இரு பாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதிகளும் இருக்கிறது.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் ரூபாய் 150 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த விண்ணப்ப கட்டணம் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு கிடையாது. இதைத்தொடர்ந்து முழு நேர பட்டைய படிப்புக்கு ஒரு வருடத்திற்கு 2112 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன், இலவச பேருந்து பயண அட்டை மற்றும் கல்வி உதவி தொகைகள் போன்றவற்றையும் மாணவ-மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2552226, 9843863477 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும், மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு மட்டுமே மாணவ-மாணவிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.