நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நாக சைதன்யாவுடன் வசித்து வந்த வீட்டை மீண்டும் அதிக விலை கொடுத்து சமந்தா வாங்கி இருக்கிறார். நாக சைதன்யா மற்றும் தனது அம்மாவுடன் அங்கு வசித்தார். இருவரும் பிரிந்த பின்னஇlர் தமிழ் தயாரிப்பாளர் முரளி மோகனுக்கு அந்த வீட்டை விற்று விட்டனர். இந்நிலையில் மீண்டும் முரளி மோகனிடம் சென்று வேறு எங்கும் பாதுகாப்பாக இல்லை என்று கூறி சமந்தா அந்த வீட்டை வாங்கியுள்ளார்.