இந்தியாவில் வரும் கல்வி ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது பல்கலைக்கழக மானிய குழு 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றின் மூலமாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றது. அதன்படி செயற்கை நுண்ணறிவு,இணைய பாதுகாப்பு மற்றும் குழந்தை பருவ பராமரிப்பு முதலான 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகள் இந்த இணையதளத்தில் இலவசமாக வழங்கப்படுவதாக பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்திற்கு 7.5 லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்கள் மற்றும் சிறப்பு நோக்க வாகன மையங்களுடன் மின் வளங்களை ஒருங்கிணைத்துள்ளனர். இதன் மூலமாக ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கப்படும் என யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். இதற்காகவே கிராம பஞ்சாயத்துகளில் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள் மற்றும் நாடு முழுவதும் 5 லட்சத்திற்கு அதிகமான பொது சேவை மையங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் பொது சேவை மையங்கள் மூலமாக பாடங்களை பெற்றால் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் அல்லது மாதத்திற்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.