கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெ தருண்யா கலந்துகொண்டு விளையாட இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட இருக்கின்றார். இதனை அடுத்து மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்த மாணவி தருண்யாவை அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கியுள்ளனர்.
Categories
சதுரங்க போட்டியில் மாவட்ட அளவில் 2 ம் இடம் பிடித்த பள்ளி மாணவி…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!
