Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடரை இழந்த கோலி அண்ட் கோ!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி இந்தத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெய்லரின் பொறுப்பான ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து, 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவந்தது. இறுதியில் இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இப்போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.

Categories

Tech |