தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது.
அப்போது ஒரு சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்த போது அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.