Categories
மாநில செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்… “36% கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்”….. ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை மாமலபத்தில் செஸ் ஒலிம்பியாட் இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பிக் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரலாற்றில் சிறப்புமிக்க 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் உலக மக்கள் அனைவரும் அறிய கூடிய வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர். இதனையடுத்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டில் நடைபெறுவது இந்தியாவுக்கே பெருமை.

இந்தியாவுக்கு பெருமை தரும் நாள் என்பதால் இந்த விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியை அழைக்க டெல்லி செல்லலாம் என திட்டமிட்டு இருந்தேன். ஆனால் கொரோனா தொற்றால் என்னால் நேரில் சென்று அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போது பிரதமர் மோடி, நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று உறுதி அளித்தார். சர்வதேச போட்டிக்கான ஏற்பாடு செய்ய 18 மாதங்கள் தேவை. ஆனால் 4 மாதங்களில் இதனை சாதித்து காட்டியுள்ளோம். இதனை தமிழ்நாடு அரசு செய்து காட்டியுள்ளது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிகப் பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும். மேலும் 44வது செஸ் ஒலிம்பியாட் மூலம் உலகமே தமிழகத்தை திரும்பி பார்க்கும், தமிழ்நாட்டின் பெயரும் புகழும் இன்று முதல் மேலே உயரம் என்று அவர் நம்பிக்கையாக தெரிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு தான் செஸ் தலைநகரமாக உள்ளது. இந்தியாவில் உள்ள 75 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அதாவது 36% இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகர்கள் தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

Categories

Tech |